சர்வதேச ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை


சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 4 கோடியே 84 இலட்சத்தைக் கடந்துள்ளது.

நேற்றைய நாளில் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும், 5 இலட்சத்து 71 ஆயிரத்து 314 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 84 இலட்சத்து 14 ஆயிரத்து 513 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவில் நேற்றைய நாளில் 1 இலட்சத்து 8 ஆயிரத்து 389 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்தியாவில் 50 ஆயிரத்து 465 பேரும், பிரான்ஸில் 40 ஆயிரத்து 558 பேரும், இத்தாலியில் 30 ஆயிரத்து 550 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: