இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள்


இந்தியாவில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 46253 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85 இலட்சத்து 13 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக் காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 23 ஆயிரத்து 611 ஆக காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

No comments: