அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனைஆலையடிவேம்பு பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தெற்று நேயாளியுடன் தொடர்பின பேணிய மரக்கரி வியாபாரி ஒருவருக்கு இன்று காலை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் PCR பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது.

இது தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ் அகிலன் அவர்கள் தெரிவிக்கையில்

மொத்தமாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இனங்காப்படட தொற்றாளருடன் தொடர்புடைய 20 நபர்களுக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் வெளி பிரதேசங்களில் இருந்து வந்தவர்ளுக்கும் தொற்று ஏற்படும் என்று சந்தேகிக்கப்பட்டவர்களுக்கும் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும்

மேலும் ஆலையடிவேம்பு பிரதேசம் சுகாதார ரீதியாக பாதுகாப்பாக இருப்பதாகவும் மக்கள் இயன்றளவு வெளியேறுவதை தவிர்குமாறும் குறித்த PCR பரிசோதனை முடிவுகள் இரண்டு நாட்களில் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

No comments: