பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்


பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று சூழ்நிலையில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க ஒருபோதும் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் அது தொடர்பில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க அந்தச் சங்கத்தினருடன் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம். அதற்கிணங்க எதிர்வரும் வாரம் இக்காலத்துக்குப் பொருத்தமான போக்குவரத்து கொள்கை ஒன்று தயாரிக்கப்படும்.

சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளுக்கிணங்க கொரோனா தொற்று செயற்பாட்டுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் ஆகிய இருதரப்பினரையும் கவனத்தில் கொண்டு இரு தரப்பினருக்கும் அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் தீர்மானம் எடுப்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்

No comments: