தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச் சாட்டில் பலர் கைது


தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச் சாட்டுக்காகக் கடந்த 24 மணி நேரத்தில் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 22 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்காக மொத்தம் 2832பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 425 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


No comments: