அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் அரிசியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை


அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் அரிசியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என வர்த்தகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரிசிக்கான கட்டுப்பாடு விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த கட்டுப்பாட்டு விலையில் அரிசியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைவாக நாடு கிலோ ஒன்றின் விலை 92 ரூபாய் எனவும், சம்பா கிலோ ஒன்றின் விலை 94 ரூபாய் எனவும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: