பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பிலான கலந்துரையாடல்


பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் அனைத்து மாகாண,வலய மற்றும் கோட்டக் கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இந்தக் கலந்துரையாடல்  இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது பாடசாலைகளில் 50 சதவீத மாணவர்களை பாடசாலைகளுக்கு வரவழைத்து நேரமாற்றம் இன்றி,சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி கல்வி செயற்பாடுகளை நடத்துவது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது.

எனினும் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச பாடசாலைகளில் நவம்பர் மாதம் 9ம் திகதி முதல் 3ம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும்,2ம் அலை கொரோனா தொற்று பரவல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு இந்த நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: