ஹட்டனில் நுகர்வோருக்கு கடும் எச்சரிக்கை

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


தீபாவளி பண்டிகை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் ஹட்டன் நகரில் நுகர்வோரின் வருகையை கட்டுப்படுத்தும் வகையில் ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கடைகளை மூடுவது தொடர்பில்  ஆலோசிக்கப்பட்டு வருகின்றது .

இந் நிலையில்,  ஹட்டன் நகரிற்கு பொருள் கொள்வனவிற்கு 08/11 வருகைத்தந்த நுகர்வோர் சுகாதார  இடை வெளியை பேணாது சிலர் பொருட்கொள்வனவில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு பொலிஸாரும் பொது சுகாதார பரிசோதர்களும் கடும் எச்சரிக்கையை விடுத்து கொவிட்  19 சுகாதார ஆலோசனையை வழங்கினர்.No comments: