கொரோனா தொற்றுக்குள்ளான காவற்துறை உத்தியோகத்தர்களின் அதிகரிப்பு


கொரோனா தொற்றுக்குள்ளான காவற்துறை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.

பொரளையை மையப்படுத்திய 41 காவற்துறை அதிகாரிகளுக்கு நேற்று கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பொரளை காவற்துறை நிலையத்தில் மாத்திரம் 56 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை பதுளை மாவட்டத்தில் மொத்தமாக இதுவரையில் 24 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு,2193 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் இதுவரையில் 34 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இதன்படி அவர்களுடன் தொடர்புபட்ட சுமார் 1407 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: