மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவானது நாளை தளர்த்தப்படவுள்ளது


மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவானது நாளை காலை 5 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் முன்னதாகவே ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட 68 காவற்துறை பிரதேசங்களுக்கு நாளைய தினம் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வெளிமாவட்டங்களுக்கு சென்று மீண்டும் திரும்புவர்கள் தொடர்பில் நாளை முதல் மாவட்ட எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ள காவற்துறை அதிகாரிகளின் ஊடாக தகவல்கள் பெறப்படவுள்ளன.

மேலும் மேல் மாகாணத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும்,அவ்வாறு செல்வதால் ஏனைய மாவட்டங்களுக்கும் கொரோனா தொற்று பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்படுகிறது.
No comments: