கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது


கொரோனா தொற்று அச்சநிலைமை காரணமாக கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகம்  மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

No comments: