ஹட்டன் கொமர்ஷல் வங்கியின் முகாமையாளருக்கு கொரோனா - வங்கிக்கு பூட்டு

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


ஹட்டன் கொமர்ஷல் வங்கியின் முகாமையாளருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். 

இதேவேளை குறித்த வங்கியின் முகாமையாளருக்கு தொற்று ஏற்பட்டமையால் ஹட்டன் நகரில் உள்ள கொமர்ஷல் வங்கி முடக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். 

கொரோனா தொற்றுக்குள்ளான வங்கியின் முகாமையாளர் கொழும்பில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு வங்கியின் உறவினர் ஒருவருக்கும் தொற்று இருந்ததாகவும் அவரின் ஊடாக முகாமையாளருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதோடு குறித்த வங்கியின் முகாமையாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பி. சி. ஆர் பரிசோதனையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை குறித்த வங்கியில் ஹட்டன்,பொகவந்தலாவ, கம்பளை, கொட்டகலை ஆகிய பகுதிகளில் உள்ளவர்களே பணிபுரிந்து வந்ததாகவும் அவர்களை சுயதனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை அந்தந்த பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகரினால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: