நானுஓயா ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு பிரிவு மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை தற்காலிகமாக மூடல்

க.கிஷாந்தன்


நானுஓயா ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு பிரிவின் பொறியியல் பிரிவு அலுவலகம் இன்று முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவில் உள்ள பொறியியல் பிரிவில் பணியாற்றிய அதிகாரி ஒருவரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்தே குறித்த அதிகாரி பணியாற்றிய இடத்தில் இருந்த ஏனைய அதிகாரிகள், ஊழியர்கள்  உட்பட அவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 43 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


இவர்கள் அனைவரிடமும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments: