ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி விடுத்துள்ள செய்தி


118 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் தனிமைப் படுத் தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்னும் அமுலில் உள்ளது.

அதன் படி மேல் மாகாணம் , குளியாபிட்டிய பொலிஸ் பிரிவு , எஹெலியகொட பொலிஸ் பிரிவு, குருணாகல் மாவட்டத்தின் குருணாகல் நகர் ஆகிய பகுதிகளுக்கு எதிர்வரும் 9ம் திகதி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என  இராணுவ தளபதி சவேந்திர சில்வாதெரிவித்துள்ளார்.

தற்போதைய நாட்டின் நிலைமையைக் கருத்திற் கொண்டு மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்ப்பதற்காக முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு இராணுவத் தளபதி பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments: