அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இரண்டாவது நாளாக பீ.சீ.ஆர் பரிசோதனை
ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 100 பேருக்கு PCR பரிசோதனைமேற்கொள்ளமுடிவெடுக்கப்பட்டுள்தாக ஆலையடிவேம்பு , பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் தெரிவித்தார்.
மேற்குறித்த 100 பேருக்கு ஆலையடிவேம்பு தர்மசங்கரி மைதானத்தில் இன்று காலை PCR பரிசோதனை மேற் கொள்ளப்படுகின்றது.
அக்கரைப்பற்று மீன் சந்தைக்கு சென்று வந்த ஆலையடிவேம்பு பிரதேச நபர்களும் ஆலையடிவேம்பு பிரதேச முச்சக்கர வண்டி சாரதிகள், வியாபாரிகள், அக்கரைப்பற்று பிரதேசத்திற்கு வேலை நிமித்தம் சென்றவர்கள் ஆலையடிவேம்பு தர்மசங்கரி மைதானத்திற்கு தேசிய அடையாள அட்டையுடன் சமூகமளிக்கவும் .
அல்லது ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துடன் தொடர்பு கொள்ளவும்.
No comments: