நாட்டின் இன்றைய வானிலை


நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்  வீசக்கூடும். 

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் இந்த திணைக்களம் போரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை மத்திய,வடமத்திய,ஊவா,வடமேல்,சப்ரகமுவ மற்றும் தெற்கு ஆகிய மாகாணங்களில் ஆங்காங்கே 100 மில்லிமீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: