நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்


நாட்டில்  நேற்றைய தினத்தில் 383 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் மினுவாங்கொடை மற்றும் பேலியாகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9092 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, நாட்டில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12570 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 6623 பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்னும்  5918 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக் காரணமாக நேற்றைய தினம் 5  கொரோனா மரணங்கள் பதிவானது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக் காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: