இலங்கையின் அரசியல் பிரமுகர் ஒருவரின் பிறந்தநாள் தினம் தமிழகத்திலும் கொண்டாடப்பட்டது


இலங்கையின் அரசியல் பிரமுகர்களில் முக்கியமானவராக விளங்கும் செந்தில் தொண்டமானின் பிறந்தநாள் தமிழகத்தில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர், சிவகங்கை, சேலம், நாமக்கல் உட்பட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழக கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக விளங்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டின் முக்கியத்துவத்தை உலகெங்கிலும் கொண்டு போய் சேர்த்தவர்களில் முக்கியமானவராக கருதப்படுபவர் செந்தில் தொண்டமான்.

தற்போது இலங்கையில் வசித்தாலும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நலச் சங்கத்தின் கௌரவத் தலைவராக அறியப்படும் செந்தில் தொண்டமான்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காகவே பிரத்தியேகமாக ஜல்லிக்கட்டு காளைகளை தன் பிள்ளைகளைப் போல வளர்த்து வருகிறார்.

கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் ஒவ்வொரு முறை ஜல்லிக்கட்டு தொடர்பாக எந்த பிரச்சனை வந்தாலும் அதற்காக குரல் கொடுத்து தமிழகத்தின் பல கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு ஜல்லிக்கட்டு மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் செந்தில் தொண்டமான்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் பல்வேறு இடங்களில் பல்வேறு கிராமங்களில் நடத்துவதற்கு நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு வாங்கி தந்ததில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.

மேலும், பல வருடங்களாகவே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் காயமுற்றால் அவர்களுக்கான மருத்துவ சிகிச்சை உதவிகளை வழங்கியதோடு அவர்களின் குடும்பத்திற்கான வாழ்வாதார உதவிகளையும் விளம்பரங்கள் இல்லாமல் வழங்கியவர் செந்தில் தொண்டமான்.

மேலும் தமிழகத்தில் M.புதூர் என்ற இடத்தில் சிறந்த ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியவர் செந்தில் தொண்டமான். இந்தப் போட்டி  உலக சாதனை புத்தகம், ஆசிய சாதனை புத்தகம் ஆகியவற்றில் இடம்பெற்றது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உலகளவில் மிகச் சிறந்த அங்கீகாரம் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு M.புதூர் ஜல்லிக்கட்டு நிகழ்வு தொடர்பாக தபால் தலையை வெளியிட்டு செந்தில் தொண்டமானை கௌரவித்தது.

ஜல்லிக்கட்டு தொடர்பாக உலக அளவில் முதன்முதலாக தபால் தலை வெளியிட்ட நிகழ்வை நடத்திய பெருமை செந்தில் தொண்டமானை சாரும்.

ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது, சிறப்பு வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்க சட்டம் கொண்டு வருவதற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்து தமிழ் சொந்தங்களுக்கு தன்னுடைய உதவிகளை தவறாமல் செய்தவர் செந்தில் தொண்டமான்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தாலும் சிறிய கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நீதிமன்றங்களில் சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்து நீதிமன்றத்தில் வாதாடி அதற்கான உரிய ஆணைகளை பெற்று தந்து பல கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க ஏற்பாடு செய்தவர் செந்தில் தொண்டமான்.

மேலும் தமிழ்நாடு வீர விளையாட்டு பாதுகாப்பு நலச் சங்க மாநில செயலர் ஒண்டிராஜ், இளைஞர் அணி தலைவர் ராஜேஷ், தேசிய ஒருங்கிணைப்பாளர சூரியூர் ராஜா, ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க நிறுவனர் (மறைந்த) அம்பலத்தரசு ஆகியோரும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டனர். இவர்களின் அனைத்து போராட்ட களங்களில் உடன் நின்று போராடியவர் செந்தில் தொண்டமான்.

கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வரும் வீரத் தமிழன் செந்தில் தொண்டமானின் பிறந்தநாள் தமிழகத்தின் பல கிராமங்களில் பல்வேறு இளைஞர்களால் கட் அவுட் வைத்து கேக் வெட்டிசிறப்பாக கொண்டாடப்பட்டது.


பொதுவாக தமிழகத்தில் தங்களுடைய அபிமான ஹீரோக்களுக்கு மட்டுமே கட்-அவுட் வைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி வரும் சூழலில், தமிழகத்தில் இல்லை என்றாலும் கடல் கடந்து வசிக்கும் ஒரு தமிழரின் பிறந்த நாளை தமிழக கிராமங்களில் உள்ள நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கட் அவுட் வைத்துக் கொண்டாடியது உண்மையில் சுவாரசியமான விஷயம்தான்.

செந்தில் தொண்டமானின் பிறந்தநாளுக்கு தமிழகம், ஆந்திரா மற்றும் புதுவையை சேர்ந்த அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.

No comments: