மேல்மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவினை நீக்குவது உகந்த விடயமில்லை - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்


மேல்மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவினை நீக்குவது உகந்த விடயமில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண இதனை தெரிவித்துள்ளார்.

மேல்மாகாணத்தில் தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்கு சட்டத்தினை நீக்குவதால் ஏனைய பகுதிகளிற்கு கொரோனா வைரஸினை பரவும் ஆபத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் வைரஸ் பரவல் அதிகரித்தால் அதற்கான பொறுப்பை சுகாதார அதிகாரிகளும் அரசாங்கமும் பொறுப்பை ஏற்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கொரோனா வைரஸ் கொழும்பு மாநகர சபை எல்லை மற்றும் வத்தளையுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பரவலை தடுத்து நிறுத்துவதற்காக ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: