கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை உயர்வு


கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இதன்படி, மேல்மாகாணத்தில் தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இவ்வாறு தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 6 பொலிஸ் அதிகாரிகள் குணமடைந்துள்ளனர்.

அத்துடன், 229 பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதேவேளை, பொலிஸ் அதிகாரிகள்  மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 1425 பேர் மேல்மாகாணத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: