ஊரடங்கு அமுலில் உள்ள பகுதி மக்களுக்கான விசேட செய்தி


அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பொதிகளைப் பெறாதவர்கள் மற்றும் ஊரடங்கு சட்டம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கு 5000 ரூபா வழங்கப்படும் என பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா வழங்க பொருளாதார மறு மலர்ச்சிக்கான ஜனாதிபதி பணிக்குழு தீர்மானித்துள்ளது.

கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டவர்களும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களை தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் அவர்களுக்கு 10,000 மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய  பொதிகளை வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: