மன்னாரில் கஞ்சாதொகை மீட்பு


மன்னார் - உயிலங்குளம் பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியிலிருந்து 20 கிலோ 555 கிராம் எடைகொண்ட கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ள கஞ்சாவானது எவரேனும் சிலரால் கைவிடப்பட்டு சென்றுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: