மக்கள் மேலும் இரண்டு வருடங்களுக்கு கொரோனா வைரசுடனேயே வாழவேண்டியிருக்கும் - சுகாதார அமைச்சின் செயலாளர்


மக்கள் மேலும் இரண்டு வருடங்களுக்கு கொரோனா வைரசுடனேயே வாழவேண்டியிருக்கும் என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.

மக்கள் கொவிட் 19 உடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரண்டாவது அலையின் போது கொரோனா வைரஸிற்கு தீர்வை காணவிட்டால் மூன்றாவது அலை உருவாகலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது அலை ஜனவரியில் உருவாகலாம் அது இன்னமும் ஆபத்தானதாக காணப்படலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக சுகாதார விதிமுறைகளை பின்பற்றி வைரஸினை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளை போல இலங்கை மக்களும் கொரோனா வைரசுடன் வாழவேண்டியிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில நாடுகள் தங்கள் நாடுகளில் கொரோனா வைரஸ் காணப்படுகின்ற போதிலும் தொடர்ந்து முன்னோக்கி செல்கின்றன என குறிப்பிட்டுள்ள ஜயரூவன் பண்டார இலங்கை பொருளாதார வளர்ச்சி, கல்வி போன்றவற்றை இடையில் தவறவிட்டு விட்டது இந்த இடைவெளியை நிரப்பவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதை தவிர வேறு மந்திரமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடபப்பட்டுள்ளது.

 

No comments: