நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் முக்கிய அறிவிப்பு


தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பயனாளர்களுக்கு விசேட அறிவித்தல்கள் சில வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, நீர்மானி வாசிப்பாளர்கள், சுகாதார முறைமைகளைப் பின்பற்றி வீடுகளுக்கு வருகை தருவார்கள் எனவும், அவர்களுடன் பேசுதல் மற்றும் சந்தித்தல் போன்ற செயற்பாடுகளை முடிந்தளவு கட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மானி வாசிப்பாளரினால் வழங்கப்படும் பற்றுச்சீட்டு, தபால் பெட்டி அல்லது வேறு ஏதேனும் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, பற்றுச்சீட்டுத் தொடர்பில் சிக்கல்கள் காணப்படுமாயின், பற்றுச்சீட்டின் பின்புறத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேசிய வடிகாலமைப்பு சபையின் waterboard.lk என்ற இணைத்தளத்தின் ஊடாகவும் கட்டணத்தை செலுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


No comments: