நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பற்றிய விபரம்


நாட்டில் நேற்றைய தினம் மேலும் 449 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை மற்றும் பேலியாகொடை கொத்தணிகளில் முன்னதாக அடையாளம் காணப்பட்ட நோயாளர்களுடன் தொடர்புடைய 445 பேரும்,வெளிநாட்டில் இருந்து வந்த 3 கடலோடிகளுக்கும்,ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 13419 ஆக உயர்ந்துள்ளது.

அதன்படி, தவுலபிட்டி – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9937 ஆக உயர்ந்துள்ளது என்று தொற்றுநோயில் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 5662 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7723 ஆக அதிகரித்துள்ளது.


No comments: