தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான செய்தி


மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை காலை 5 மணியுடன் நீக்கப்பட்டாலும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் பல பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே இருக்கும்.

கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, மோதறை, புளுமென்டல், கொட்டாஞ்சேனை, கிரேண்பாஸ், பொரெஸ்மோர், பார்பர் வீதி, மாளிகாவத்தை, தெமட்டகொடை, வெள்ளம்பிட்டி, வாழைத்தோட்டம் மற்றும் பொரளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பரைதேசங்களாக தொடரும்.

கம்பஹா மாவட்டத்தின் வத்தளை, பேலியகொடை, கடவத்தை, ராகம, நீர்கொழும்பு, பமுனுகம, ஜா-எல மற்றும் சபுகஸ்கந்த ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக தொடரும்.

களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை,இங்கிரிய காவற்துறை அதிகார பிரிவுகளும்,வேக்கட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பேணப்படும். 

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments: