குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு மீண்டும் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்


கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணத்தில் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு மீண்டும் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய மேல் மாகாணத்தில் கொழும்பு,கம்பஹா,களுத்தறை மாவட்டங்களில் வாழ்வாதாரங்களை இழந்த,நிவாரணம் வழங்க வேண்டும் என அடையாளம் காணப்படும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அதேநேரம் சுகாதார அதிகாரிகளின் பரிந்துறைக்கு அமைவாக நாடு முழுவதிலும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சகல குடும்பங்களுக்கும் தலா 10000 ரூபா வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிவாரணத்தை வழங்கும் பணிகள் மாவட்ட செயலாளர்கள்,பிரதேச செயலாளர்கள்,கிராம உத்தியோகத்தர்கள்,கிராம குழுக்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினரின் ஒருங்கிணைப்பு மூலம் வழங்கபப்டவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: