எதிர்கட்சியினரின் தேவைகளுக்கு ஏற்ப முடக்கல் நிலையை அறிவிப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை


எதிர்கட்சியினரின் தேவைகளுக்கு ஏற்ப முடக்கல் நிலையை அறிவிப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுசெயலாளர் சகார ஹாரியவசம் தெரிவித்துள்ளார்.

சில தனிநபர்கள் தங்கள் தேவைகளுக்காக முடக்கலை கோருகின்றனர் அவர்களின் தேவைகளுக்காக முடக்கலை அறிவித்து நாட்டின் பொருளாதாரத்தை அழிப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகள் அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டின் நடவடிக்கைகளை முடக்குவது சாதாரண விடயமல்ல என தெரிவித்துள்ளார்.

மிகவும் அவசரமான சூழ்நிலை உருவானால் மாத்திரமே நாட்டின் நடவடிக்கைகளை முடக்குவோம் என அவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: