கொரோனா தொற்று காரணமாக 90 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு


கொரோனா தொற்று காரணமாக, இலங்கையைச் சேர்ந்த 90 பேர், வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, சவூதி அரேபியாவில் 31 பேரும், குவைத்தில் 20 பேரும், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் 10 பேரும், கட்டாரில் 06 பேரும், பிரித்தானியாவில் 05 பேரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, ஓமான், அமெரிக்கா, கனடா, ஆகிய நாடுகளில் தலா 04 பேர் வீதம் 12 பேரும், பஹ்ரைன், ஜேர்மனி ஆகிய நாடுகளில் தலா 02 பேர் வீதம் 04 பேரும், இஸ்ரேல், இத்தாலி ஆகிய நாடுகளில் தலா ஒருவர் வீதமும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: