சிகை அலங்கார குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு

செ.துஜியந்தன் 


நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக தொழிலுக்கு செல்ல முடியாத குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்தில் தொழில் பாதிக்கப்பட்ட இருபது சிகை அலங்கார குடும்பங்களுக்கு முதல் கட்டமாக 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது வெல்லாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் அன்னதான மண்டபத்தில் இடம்பெற்ற போது போரதீவுப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் கணக்காளர் ரி.அம்பிகாபதி கிராம சேவக உத்தியோகத்தர்களான பி.இம்சன்  பிரபாகரன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது

No comments: