கொழும்பில் வசிப்பவர்களில் குறைந்த வருமானம் பெறுகின்ற மக்களுக்கான 5000 ரூபா நிவாரணம்


கொழும்பில் வசிப்பவர்களில் குறைந்த வருமானம் பெறுகின்ற மக்களுக்கான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு நகரில் உள்ள 18 அஞ்சல் மற்றும் உப அஞ்சல் நிலையங்கள் ஊடாக பொலிஸ் மற்றும் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

அதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 13ம் திகதி வரையில் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 13 ஆயிரம் பேர் பலன்பெறவுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments: