கொரோனா தொற்றினால் மேலும் 5 பேர் உயிரிழப்பு


கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொழும்பு 02 பகுதியை சேர்ந்த, 46 வயதுடைய ஆணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று குறித்த நபர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 68 வயதுடைய ஒருவர் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு 12ஐ சேர்ந்த 58 வயதுடைய ஒருவரும், கொழும்பு 14 ஐ சேர்ந்த 73 வயதுடைய ஒருவரும், கொழும்பு 15 ஐ சேர்ந்த 74 வயதுடைய ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்ப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments: