பொகவந்தலாவ பகுதியில் மேலும் 37 பேருக்கு பி. சி. ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


பொகவந்தலாவ கொட்டியாகலை மத்திய பிரிவு தோட்டப்பகுதியில் கொரோனா தொற்று

உறுதியான நபரோடு தொடர்பு வைத்திருந்த மேலும் 30 பேருக்கு 02.11.2020.திங்கட்கிழமை பி.சி.ஆர் பரிசோதனைமுன்னெடுக்கப்பட்டதாக பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த மாதம் கொழும்பு பேலியாகொட மீன்சந்தைக்கு சென்று மீன் ஏற்றி வந்த
பார ஊர்தியின் சாரதி ஒருவருக்கும் அவரின் மனைவி மற்றும் சகோதோரி உட்பட
மூன்று பேருக்கு கொரோனா தொற்றுறு தி செய்யபட்டதை தொடர்ந்து கடந்த வாரம்
முதற்கட்டமாக அவர்களோடு தொடர்பு வைத்திருந்த 32 பேருக்கு பி. சி. ஆர்
பரிசோதனை மேற்கொள்ளபட்ட போது குறித்த 32 பேருக்கும் கொரோனா தொற்று
இல்லையென அறிக்கை வெளியானது.

அதனை தொடர்ந்து மேலும்  37 பேருக்கு இன்றைய தினம் பி. சி. ஆர் பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டு அதன் மாதிரிகள் கண்டிக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளதாக
பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
No comments: