ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச் சாட்டுக்காகக் கடந்த 24 மணி நேரத்தில் 150 பேர் கைது


தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச் சாட்டுக்காகக் கடந்த 24 மணி நேரத்தில் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 21 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித் துள்ளார்.

அத்துடன் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்காக மொத்தம் 2682பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 403 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முகக் கவசம் அணியத் தவறியமை மற்றும் சமூக இடை வெளியைப் பின்பற்றத் தவறிய 8 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், முகக் கவசம் அணியத் தவறியமை மற்றும் சமூக இடை வெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச் சாட்டுகளுக்காக இதுவரை 104 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: