கடந்த 24 மணி நேரத்தில் 139 பேர் கைது


தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச் சாட்டுக்காகக் கடந்த 24 மணி நேரத்தில் 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது 18 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்காக மொத்தம் 2532 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 382 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

முகக் கவசம் அணியத் தவறியமை மற்றும் சமூக இடை வெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுகளுக்காக இதுவரை 96 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: