2021ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பிலான விவாதம் குறித்து கலந்துரையாடல்


2021ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதம் குறித்து தீர்மானிப்பதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று சபாநாயகர் தலைமையில்  இடம்பெறவுள்ளது.

இதன்படி எதிர்வரும் வாரம் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வரவு செலவுதிட்ட விவாதம் இடம்பெறும் திகதிகள் குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2021ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம், நிதி அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் எதிர்வரும் 17ம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: