தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 200 பேர் கைது


தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச் சாட்டுக்காகக் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்காக மொத்தம் 2393 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 356 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

முகக் கவசம் அணியத் தவறியமை மற்றும் சமூக இடை வெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுகளுக்காக இதுவரை 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: