கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயலணியுடன் தொடர்பு கொள்வதை இலகுபடுத்தும் வகையில் துரித தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்


கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயலணியுடன் பொதுமக்கள் இலகுவாக தொடர்புகொள்ளக்கூடிய வகையில் துரித தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிலைமைகளின்போது, கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயலணியுடன் தொடர்பு கொள்வதை இலகுபடுத்தும் வகையில் இந்த இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயலணியின் கடமை நேர அதிகாரியை 011 286 000 21 011 286 0O0 3 / 0112 86 000 4 எனும் தொலைபேசி இலக்கங்களின் மூலம் அல்லது covid195120@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியின் ஊடாக அணுக முடியும்.

அத்துடன், கடற்படை மற்றும் விமானப்படையின் கடமை நேர அதிகாரியை – 011 40 55 932 தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ள முடியும்.

மேலும், சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவை, 011 36 88 664 / 011 30 30 864 எனும் தொலைபேசி இலக்கங்களின் மூலம் அணுக முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: