மீண்டும் எதிர்வரும் 12ம் திகதி கூடவுள்ள பாராளுமன்றம்


பாராளுமன்ற அமர்வு மீண்டும் எதிர்வரும் 12ம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்று நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் 3 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள், அழைப்பு விடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற சபை உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய எந்தவொரு நபர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments: