ஒரேநாளில் அதிகளவான PCR பரிசோதனைகள் நேற்று பதிவாகியுள்ளது


நாட்டில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணும் பொருட்டு நேற்றைய தினத்தில் மாத்திரம் 4880 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கபட்டுள்ளன.

இலங்கையில் கொரோனா தொற்று குறித்த அச்சநிலை ஏற்பட்டதில் இருந்து, ஒரேநாளில் முன்னெடுக்கப்பட்ட அதிகூடிய PCR பரிசோதனை எண்ணிக்கை இதுவாகும்.

நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஆரம்பித்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில், தொற்றாளர்களை விரைவாக அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டு வருகின்றது.

இந்த நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக 3 இலட்சத்து 3381 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: