கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மருதமுனை கடற்கரை வீதிக்கு காபட் ( Carpet) இடும் பணிகள் ஆரம்பம்

ஏ.எல்.எம்.ஷினாஸ்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் ஒரு இலட்சம் கிலோமீற்றர் காபட் வீதிகளை அபிவிருத்தி செய்யும் விசேட வேலைத்திட்டத்திற்கு அமைய மருதமுனை கடற்கரை பிரதான வீதி காபட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்பப் பணிகள் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டன.

தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் குறித்த வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று (31.10.2020) ஆரம்பிக்கப்பட்டன.

பாண்டிருப்பு தொடக்கம் பெரியநீலாவணை வரைக்குமான சுமார் 2 கிலோ மீற்றர் துரம்கொண்ட நவீன காபட் வீதியாக மருதமுனை கடற்கரை பிரதான வீதி புணரமைப்பு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மிக நீண்டகாலமாக குன்றும் குழியுமாக காணப்பட்ட இந்த வீதியை இதற்கு முன்னர் பிரதேசத்திற்கு வரும் அரசியல் தலைவர்கள் தேர்தல் காலங்களில் மேடைகளில் பேசுபொருளாக  பயன்படுத்திய போதிலும் வீதி அபிவிருத்தி செய்யப்படவில்லை.

தற்போது புணரமைப்பு பணிகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் பிராத்தனை செயததுடன் தமது வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர்.No comments: