நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்


நாட்டில் நேற்றைய தினம் 309 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த கொரோனா தொற்றாளர்கள் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேலியகொட மத்திய மீன் சந்தை வளாகத்தில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட 188 பேர், தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலை யத்தில் 24 பேர், மினுவங்கொடை தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட 97 பேர் இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, மினுவங்கொடை கொரோனா கொத்தணி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  2817 ஆக அதிகரித்ததுடன்,நாட்டில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 6287 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் நாட்டில் தற்போது  2712 பேர் கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 3561 பேர் குணமடைந்துள்ளதுடன் 14 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: