பரீட்சைத் திணைக்களத்தின் விசேட நடவடிக்கை


அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் இணைந்து தேசிய பரீட்சை அவசரகால செயற்பாட்டுப் பிரிவு ஒன்றை அமைத்துள்ளன.

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை மற்றும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றின் போது ஏற்படக்கூடிய அவசரகால நிலைமைகளின் போது செயற்படும் வகையில் இந்தப் பிரிவு  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த  செயற்பாட்டுப் பிரிவு எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் நவம்பர் 9 ஆம் திகதி வரை மாத்திரமே செயற்படவுள்ளது.

மேலும், இந்த  செயற்பாட்டுப் பிரிவு பரீட்சைகள் ஆணையாளர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் ஆகியோர் தமைமையில் செயற்படவுள்ளது.

இதற்கமைய, குறித்த காலப்பகுதியில் ஏதேனும் அவசர நிலை ஏற்படுமாயின் பரீட்சைத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள 1911 எனும் துரித இலக்கத்திற்கு தொடர்பினை மேற்கொண்டு சேவைகளை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்டுள்ள 117 எனும் துரித இலக்கத்திற்கு தொடர்பினை மேற்கொண்டு 24 மணிநேரமும் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தேசிய பரீட்சை அவசரகால செயற்பாட்டுப் பிரிவு இது தொடர்பான அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு முன்னதாகவே வழங்கியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

No comments: