வெள்ளவத்தை மற்றும் பம்பலபிட்டிய பகுதிகளில் ஊரடங்கு தொடர்பில் வெளியாகும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம்


வெள்ளவத்தை மற்றும் பம்பலபிட்டிய பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆகவே, வெள்ளவத்தை மற்றும் பம்பலபிட்டிய பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: