ரிஷாட் பதியுதீனை தனது வீட்டில் தங்க வைத்த குற்றச்சாட்டில் குறித்த வீட்டின் உரிமையாளர் கைது


கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தனது வீட்டில் தங்க வைத்த குற்றச்சாட்டில் குறித்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை குடியிருப்புத் தொகுதியிலுள்ள குறித்த வீட்டின் உரிமையாளரையே குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த வீட்டின் உரிமையாளரிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 6 நாட்களாக தேடப்பட்டுவந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று அதிகாலை தெஹிவளை பிரதேசத்தில்  குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: