மேல்மாகாணத்தில் தங்கியுள்ள வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள கோரிக்கை


மேல்மாகாணத்தில் தங்கியுள்ள வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை குறித்த மாகாணத்திலிருந்து வெளியேற வேண்டாம் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை வரை அமுலாக்கப்படவுள்ளது.

இந்தநிலையில் மேல்மாகாணத்தில் இருக்கும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளிமாவட்டங்களுக்குப் பயணிப்பதால் அந்த மாவட்டங்களிலும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் காணப்படும்.

ஆகையால்  கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு யாரும் செல்ல வேண்டாம் என இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: