ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று
ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலமைப்பின் 20வது திருத்தம் மற்றும் நாடாளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது
No comments: