வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்


மத்திய மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

மத்திய மாகாண போக்குவரத்து ஆணையாளர் பாரமி தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை முதல் ஒருமாத காலப்பகுதிக்கு மத்திய மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படவுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த காலப்பகுதிக்காக தண்டப்பணம் அறவிடாது இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், இது குறித்து உரிய பொலிஸ் நிலையங்களை அறிவுறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: