விமான நிலையங்களை திறப்பது தொடர்ந்தும் காலதாமதமாகும்- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க


சுகாதார துறை மற்றும் கொரோனா தடுப்பு செயலணி ஆகியன அனுமதி வழங்கும் பட்சத்தில், எந்தவொரு காலப்பகுதியிலும் விமான நிலையங்களை திறப்பதற்கு தயாராக இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனமானது, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டிருப்பதன் காரணமாக, விமான நிலையங்களை திறப்பது தொடர்ந்தும் காலதாமதமாகுமெனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும், சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றின் நிலைமை கடும் மோசமாக இருப்பதன் காரணமாக அடுத்த ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் விமான நிலையங்களை திறப்பது குறித்து ஆராய முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, வெளிநாடுகளில் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கபடுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: