தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள அறிவிப்பு


ஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி பொதுமக்களுக்கு மருந்துகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறு வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்போது, தனிமைப்படுத்தல் சுகாதார விதிமுறைகள் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் வழிகாட்டல்கள் ஆகியவற்றுக்கு அமைய மருந்தக உரிமையாளர்கள் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments: